நெல்லையில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் கொண்டாட அரிவாளுடன் கூடிய 8 பேர் கைது
சேரன்மகாதேவி,திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே, சிறையில் இருக்கும் ஏ-பிளஸ் பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியின் பிறந்த நாளை கொண்டாட அரிவாளுடன் கூடிய 8 ப
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே, சிறையில் இருக்கும் ஏ-பிளஸ் பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியின் பிறந்த நாளை கொண்டாட அரிவாளுடன் கூடிய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், காவல்துறையின் ஏ-பிளஸ் பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சேரன்மகாதேவியில் இருந்து கூனியூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் நேற்று இரவு 8.50 மணியளவில் ஒரு கும்பல் ரகசியமாக கூடியது.


