தமிழக அமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை: துரை வைகோ
திருச்சி: ''எனக்கு தமிழக அரசில் அமைச்சராகும் ஆசை இல்லை,'' என ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பூங்குடிப்பட்டியில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை, திருச்சி தொகுதி எம்.பி., துரை வைகோ திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய, ம.தி.மு.க., திருச்சி தெற்கு மாவட்ட செயலர் தமிழ் மாணிக்கம், ''முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சிறந்த எம்.பி.,யாக செயல்படும் துரை வைகோவை இடைத் தேர்தலில் நிறுத்தி, தமிழக அமைச்சரவையில் சேர்க்க வேண்டும்,'' என்றார்.


