மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாள்: அமித் ஷா புகழஞ்சலி
புதுடெல்லி,மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நினைவு அஞ்சலி தெரிவித்துள்ளார். மகாகவி நாள்சுப்பிரமணிய பாரத
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நினைவு அஞ்சலி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார். தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
இவர் தனது 39 ஆம் வயதில் 1921 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் மறைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் -11 பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நாள் 'மகாகவி நாள்' என கடைபிடிக்கப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



