10 ஆண்டுகளாக படுக்கையில் முடங்கிய நிலையிலும், பல உயிர்களைக் காத்து வரும் ஐதராபாத் பெண்
ஐதராபாத்,ஐதராபாத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் படுக்கையிலேயே முடங்கியிருக்கும் 55 வயது லட்சுமி நரசம்மா, தற்க
ஐதராபாத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் படுக்கையிலேயே முடங்கியிருக்கும் 55 வயது லட்சுமி நரசம்மா, தற்கொலை தடுப்பு உதவி மையம் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நரசம்மா (வயது 55). அவருக்கு, அவரது 20 வயதிலேயே முடக்கு வாதம் என்ற கடுமையான நோய் பாதிப்பு ஏற்பட்டது. காலப்போக்கில் இந்நோய் தீவிரமடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக அவர் முற்றிலும் நடக்க முடியாமல் படுக்கையிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார். உடல் ரீதியான வேதனையாலும், குடும்பத்தின் கடுமையான நிதி நெருக்கடியாலும் அவரே ஒரு கட்டத்தில் தீவிர மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு தனது அண்டை வீட்டாரின் வழிகாட்டுதலின்படி, ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் ‘ஒன் லைப்’ (1Life) என்ற தற்கொலை தடுப்பு உதவி மையத்தில் தொலைபேசி ஆலோசகராக லட்சுமி இணைந்தார். தீவிர மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இந்த உதவி மையத்தை அழைப்பவர்களின் வலிகளை, லட்சுமி தனது படுக்கையிலிருந்தவாறே தொலைபேசி மூலம் பொறுமையாகக் கேட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதுவரை 300-க்கும் மேற்பட்டோரின் தற்கொலை எண்ணங்களை மாற்றி, அவர்களை நல்வழிப்படுத்தியுள்ளார்.

