கம்பன் கால்வாய் சீரமைப்பு திட்டத்தையும் அரசு கைவிட்டது! ரூ.350 கோடிக்கு மதிப்பீடு தயாரிப்போடு முடக்கம்
காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட்டதால், 350 கோடி ரூபாயில் கம்பன் கால்வாய் சீரமைப்பு திட்டத்தையும் அரசு கைவிட்டுள்ளது. வேறு ஏதேனும் நிதி பெற்று, கம்பன் கால்வாயை அரசு சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில், கம்பன் கால்வாய் என்ற முக்கிய நீர் வழித்தடம் தொடங்குகிறது. அங்கிருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, 44 கி.மீ., கடந்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது.
இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


