தி.மு.க.வை ஒழிப்பதில் தான் த.வெ.க. குறியாக உள்ளது- கிருஷ்ணசாமி பேட்டி
கோவை, கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-த.வெ.க. ஆட்சியில் 116 நாட்களில் கொலை, கொள
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க. ஆட்சியில் 116 நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் என 500 குற்றங்கள் நடந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது விஜய் கவனத்திற்கு வந்ததா?. போதைப்பொருட்கள் பயன்பாடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை தடுக்க அரசு மேற்கொள்ள உள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தெளிவான பதிலை அளிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் இறுதி தீர்ப்பாகாது. நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்புக்கு பிறகே குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியும். எனவே, விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஒருவரை குற்றவாளி என முடிவு செய்வது சரியல்ல. எதிர்கட்சியினர் தவறு செய்திருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் முதல்-அமைச்சர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.



