ஆந்திராவில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து: பெண் பலி; 5 பேர் காயம்
அமராவதி,ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பர
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். தரிசனத்தை முடித்துக் கொண்டு, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கார் மூலம் தங்களது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் கார் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தால் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.
