நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது
சென்னை,தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. இது
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு “இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில்” தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது. தமிழை முத்தமிழாக வகைப்படுத்தி வளர்த்தனர் தமிழர்கள். முத்தமிழில் மூன்றாம் தமிழாக உள்ள நாடக்கலையின் வரலாறு கூத்து, இசை நாடகம், வரலாற்று நாடகம், புராண இதிகாச நாடகம், சமூக நாடகம், மௌன நாடகம் என பல பரிமாணங்கள் கண்டுள்ளது.
நாடகக்கலையின் முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படுவதன் மூலம் நடிப்பின் பல பரிமாணங்களை இளைஞர்கள் பெற முடியும் என்ற அடிப்படையில் கலை பண்பாட்டுத்துறை நாடகப்படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அரசிடம் அனுமதி பெற்றது. இதன் அடிப்படையில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.



