தருமபுரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்: பொதுப்பணித் துறையினா் விசாரணை
தருமபுரி அருகே ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் சோழவந்தான் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை சாா்பில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஏரியில் மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இதனால் மீன்கள் அழுகி துா்நாற்றமும் வீசுகிறது.
இதுகுறித்து அச்சமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த பொதுப்பணித் துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.


