கோஷ்டி மாறும் பிரதீப் ஈஸ்வர்
பெங்களூரு: 'அடுத்த முதல்வர் சித்தராமையா' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், இரண்டு முறை கோஷமிட்டது, அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தியது.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் கூட்டமைப்பு மாநாடு, பெங்களூரில் நேற்று முன் தினம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட, பலர் பங்கேற்றனர்.
இதில் சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், ' என் மனதில் ராமனும் இருக்கிறார். சித்தராமையாவும் இருக்கிறார். சித்தராமையா குருபர் சமுதாய தலைவர் மட்டுமின்றி, அஹிந்த சமுதாய தலைவராகவும் விளங்குகிறார். அவரை ஆடு மேய்ப்பவர் என, பலரும் விமர்சித்தனர். ஆனால் இவர் அதிக எண்ணிக்கையில், பட்ஜெட் தாக்கல் செய்தவர்' என புகழ்ந்தார்.

