நான்கு மாதங்களில் ஏர்வாடி கடலில் ஒதுங்கிய 3 உடல்கள்
கீழக்கரை: ராமநாதபுரம் மாட்டம் ஏர்வாடி அருகே சடை முனியன் வலசை மன்னார் வளைகுடா கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஆண் தலை சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியது. ஏர்வாடி அருகே சடை முனியன் வலசையில் மரைன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரை அருகே சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. தலைப்பகுதி முழுவதும் சிதைந்த நிலையில் வெறும் எலும்புக்கூடாக 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது. இறந்தவர் குறித்து கீழக்கரை மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த நான்கு மாதத்தில் இதுவரை மூன்று ஆண்களின் உடல் மன்னார் வளைகுடா கடலில் கரை ஒதுங்கிய நிலையில் அடையாளம் காணப்படவில்லை. இவர்கள் வேறு பகுதிகளில் கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டனரா என விசாரிக்கின்றனர்.

