நாய்களுடன் முயல் வேட்டை 4 பேரை பிடித்து விசாரணை
மேட்டூர்: மேச்சேரி, பாணாபுரம், பொதியன்காட்டு வளவை சேர்ந்தவர்கள் அகத்தியன், 22, செல்வகுமார், 32, அவரது சகோதரர் கார்த்தி, 25. அருகே உள்ள மூப்பனுார் அடுத்த தொட்டியனுாரை சேர்ந்தவர் ராமசுந்தரம், 21.
நேற்று அதிகாலை, மேட்டூர் வனச்சரகம், கோனுார் காப்புக்காடில், இரு நாய்களுடன் முயல் வேட்டைக்கு சென்றனர். இதை பார்த்த, மேட்டூர் வனச்சரகர் செங்கோட்-டையன் தலைமையில் வனத்துறையினர், 4 பேரையும் பிடித்து, மேட்டூர் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரிக்கின்-றனர். மேலும் அவர்கள் வேட்டைக்கு அழைத்து சென்ற இரு நாய்களையும், தனி அறையில் அடைத்தனர்.