9/11 Anniversary: `குப்பைத் தொட்டி டு புல்லட்' பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்துக் கொன்றது எப்படி?
அபோதாபாத் வீட்டிலிருப்பது பின் லேடன்தான் என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. சி.ஐ.ஏ. இயக்குநர் லியோன் பனேட்டா 80 சதவிகிதம் நம்பினார். அப்போது அமெரிக்க துணை அதிபராக இருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் 40 சதவிகிதம்கூட நம்பவில்லை.| September 11 Anniversary: A detailed recap on how Osama Bin Laden was killed
அபோதாபாத் வீட்டில் இருப்பது பின் லேடன்தான் என்பதை யாரும் 100 சதவிகிதம் நம்பத் தயாராக இல்லை. சி.ஐ.ஏ. இயக்குநர் லியோன் பனேட்டா 80 சதவிகிதம் நம்பினார். அப்போது அமெரிக்க துணை அதிபராக இருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் 40 சதவிகிதம்கூட நம்பவில்லை.
இதே நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், உலகத்தின் போக்கையே மாற்றியது. அந்தத் தாக்குதல் நிகழ்ந்தபிறகு அமெரிக்க அரசின் ஒற்றை இலக்காக இருந்தது, அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைத் தீர்த்துக் கட்டுவது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து 2011 மே 2-ம் தேதி பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனைக் கொன்றது அமெரிக்க ராணுவம்.
எப்படி பின் லேடனின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தார்கள், ஒசாமாவைத் தீர்த்துக் கட்டும் ஆபரேஷனை எப்படித் திட்டமிட்டார்கள் என எல்லாவற்றையும் நீண்ட காலம் ரகசியமாக வைத்திருந்தது அமெரிக்கா. அந்த ரகசியங்கள் வெளியானபோது அமெரிக்க உளவு அமைப்பின் மீதும், பின் லேடனின் யுக்திகள் பற்றியும் பிரமிப்புகள் அதிகமாகின.


