‘இடைத்தோ்தலில் வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக தகவல் சீட்டு’
புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக். 6-ஆம் தேதி நடைபெறும் தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தலில் வாக்காளா் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்படும் புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதில், வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் என்றும், வாக்குப் பதிவு நாளுக்கு 5 நாள்களுக்கு முன்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



