போலீஸ் செய்திகள் : விருதுநகர்
இரு தரப்பினர் மோதல்: மூன்று பேர் கைது சிவகாசி: தேவகுமார் தெருவை சேர்ந்தவர் கவுதம் 18. இவர் பைபாஸ் ரோடு
சிவகாசி: தேவகுமார் தெருவை சேர்ந்தவர் கவுதம் 18. இவர் பைபாஸ் ரோடு பகுதியில் வரும்போது முன் விரோதத்தில் 56 வீட்டு காலனியைச் சேர்ந்த பாலகணேஷ் 31, முனீஸ்வரன் காலனி சோலைகுமார் 30, வம்பிழுத்தான் முக்கு விஷ்வா ஆகியோர், நீ சோமசுந்தரத்தின் மாப்பிள்ளை தானே என கேட்டு தகாத வார்த்தை பேசி கட்டையால் அடித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கௌதம் அவரது தரப்பைச் சேர்ந்த ராம்ஜி விக்னேஸ்வரன் மாரீஸ்வரன் ஆகியோர் பாலகணேஷை தாக்கினர். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகணேஷ், சோலைகுமார், கவுதம் ஆகியோரை கைது செய்து, மற்றவர்களை தேடுகின்றனர்.
விவசாயக் கருவி அனுப்புவதாக ரூ.3.58 லட்சம் பணம் மோசடி
சாத்துார்: சாத்துார் ரெங்கப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி 62. மகாலட்சுமி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் பெயரில் விவசாயக் கருவிகள் விற்பனை செய்து வருகிறார். குஜராத்தை சேர்ந்த விஸ்வகர்மா விஜயகுமார் கோபால் பாய் என்பவர் புல்வட்டர் அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். விவசாயத்திற்கான ரோட்ட வெடர் கருவி தயாரிப்பதாகவும் 10 கருவிகள் அனுப்ப முன்பணமாக ரூ 7.28 லட்சம் வழங்க கூறியுள்ளார். இதை நம்பிய அழகர்சாமி அவரது வங்கி கணக்கிற்கு 2 தவணையாக ரூ 7.28 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்டபடி 10 கருவிகள் வழங்காமல் 5 மட்டும் அனுப்பி உள்ளார். மீத பணம் ரூ 3,58,400 ஐ அழகர்சாமி அவரிடம் கேட்டபோது அவர் பணத்தையும் விற்பனைக்கு ரோட்ட வெடர் கருவியை அனுப்பாமலும் ஏமாற்றி வந்துள்ளார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். -------
