தேர்தல் வாக்குறுதிகள் என்னவானது; ஆசிரியர்கள், பணியாளர்கள் கேள்வி
கோவை: சட்டசபை தேர்தலுக்கு த.வெ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு, அனைத்து ஆசிரியர்கள் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 5 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்தம், தற்காலிகம், தினக்கூலி, தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை வெளிப்படையாக நிரப்ப வேண்டும் ஆகியவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக த.வெ.க. அறிவித்தது.
இவற்றை அரசாணைகளாக மாற்ற வேண்டும்; நடைமுறைப்படுத்தி பணியாளர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என, அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
