ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க அமைப்பு தின விளையாட்டு விழா
தர்மபுரி: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின், 40வது சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு, விளையாட்டு விழா நேற்று நடந்தது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின், 40வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, தர்மபுரியில் தனியார் பள்-ளியில் விளையாட்டு விளையாட்டு விழா நேற்று நடந்தது. இதில், கிரிக்கெட், கேரம், குண்டு எரிதல், இறகு பந்து, எறிபந்து ஆகிய விளையாட்டு போட்டிகளில், 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் முக-மது இலியாஸ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் இளங்குமரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தருமன் ஆகியோர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். முன்ன-தாக, அமைப்பு தினத்தையொட்டி சங்க கொடியேற்றி அனைவ-ருக்கும் இனிப்பு வழங்கினர்.


