டாம்கோ, டாப் செட்கோ கூட்டம் ரூ.2.47 கோடி கடன் வழங்க முடிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த டாம்கோ, டாப் செட்கோ கூர்ந்தாய்வுக் கூட்டத்தில் 2.37 கோடி ரூபாய் வழங்க செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடேசன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட தொழில் மைய அலுவலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 9 டாம்கோ குழுக்கள், மற்றும் 2 தனிநபர்கள் என 152 பேருக்கு ஒரு கோடியே 53 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய், 6 டாப்செட்கோ குழுக்களில் 96 பேருக்கு 94 லட்சம் ரூபாய் என 2 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.


