குரோம்பேட்டையில் சாலை விபத்து: லாரியில் சிக்கி 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி
தாம்பரம்,கும்பகோணத்தை சேர்ந்தவர் ஜமுனா (23 வயது) நர்சிங் முடித்து உள்ளார். இவர் குரோம்பேட்டையில் தோழி ஸ்ரீஜா என்பவருடன் தனியாக அறை எடுத்து தங்கி வேலை தேடி வந்தா
கும்பகோணத்தை சேர்ந்தவர் ஜமுனா (23 வயது) நர்சிங் முடித்து உள்ளார். இவர் குரோம்பேட்டையில் தோழி ஸ்ரீஜா என்பவருடன் தனியாக அறை எடுத்து தங்கி வேலை தேடி வந்தார். ஸ்ரீஜா குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தோழிகள் இருவரும் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக மொபட்டில் சென்றனர். ஸ்ரீஜா வண்டியை ஓட்ட ஜமுனா பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை, ரேடியல் சாலையை இணைக்கும் பாண்ட்ஸ் மேம்பாலம் அருகே சென்றபோது மேம்பாலம் மீது செல்ல வந்த டாரஸ் லாரி திடீரென மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டுடன் லாரியில் சிக்கிய ஜமுனா சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி ஸ்ரீஜா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தோழி ஜமுனா கண்முன் இறந்ததை கண்டு அவர் கதறி துடித்தார். காயம் அடைந்த ஸ்ரீஜா சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



