சேலம், நாமக்கல்லில் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு... 12.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான விதைகளுக்கு தடை..!
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், விதை சட்ட விதிகளை மீறி இருப்பு வைக்கப்பட்டிருந்த 12.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டன.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், விதை சட்ட விதிகளை மீறி இருப்பு வைக்கப்பட்டிருந்த 12.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டன.
விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தலைமையிலான அதிகாரிகள், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 41 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது, விதை சட்ட விதிகளை பின்பற்றாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2.85 மெட்ரிக் டன் விதைகள் கண்டறியப்பட்டன.



