“உலகளாவிய டாப் 10” பட்டியலில் இடம்பிடித்த மாதவனின் “ஜி.டி.என்”
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் பழம்பெரும் இந்திய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான ‘ஜி.டி.என்’ படம், தற்போது நெட்பிளிக்ஸ் சர்வதேச தளத்தில் பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது.
மறைந்த தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள ‘ஜி.டி.என்’ படத்தில் ஆர். மாதவன், ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியாமணி, சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், வினய், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தியாவின் முன்னோடி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பயணமும், அவரது கண்டுபிடிப்புகளும் படத்தின் மையமாக அமைந்துள்ளன.

