முதலிடம் பிடித்தார் விஷால்: இந்திய தடகள 400 மீ., ஓட்டத்தில்
புதுடில்லி: இந்திய தடகள சீரிஸ் 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் விஷால் முதலிடம்.
டில்லியில், இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் பைனல் நடந்தது. ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில், இலக்கை 45.36 வினாடியில் கடந்த தமிழகத்தின் விஷால் முதலிடத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் மஹாராஷ்டிராவின் ஐஸ்வர்யா (52.51 வினாடி) முதலிடம் பிடித்தார்.
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் அபினயா (11.31 வினாடி), கிரிதாரணி (11.35) முறையே 2, 3வது இடம் பிடித்தனர். மஹாராஷ்டிராவின் ஹரிதா (11.22) முதலிடத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜுர் (10.21 வினாடி) முதலிடத்தை தட்டிச் சென்றார்.




