வாறுகாலில் மீன் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார கேடு : அவதியில் மக்கள்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை நகராட்சி வார்டுகளில் மீன் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் திருச்சி மெயின் ரோடு ஓரத்தில் நகராட்சி பிரதான வாறுகால் கட்டியுள்ளது. திருமண மண்டபத்திற்கு அருகே மீன் கடை உள்ளது. இதில், மீனின் கழிவுகள், மீன்களை சுத்தம் செய்த பின் அதன் கழிவுநீர் உள்ளிட்டவர்களை வாறுகாலில் கொட்டுகின்றனர். வாறுகால் அரைகுறை பணியில் இருப்பதால் கழிவுநீர் சீராக வெளியேற முடியாத நிலையில், கொட்டப்படும் மீன் கழிவுகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.
மீன் கழிவுகளை சேகரித்து நகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.


