வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: சிக்கிய இன்ஜினியருக்கு சிறை
கோவை: தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு இ-மெயில் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் சரத் சுப்பிரமணியன் சங்கர் மீது, கோவை சைபர் கிரைம் போலீசில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகம், விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடந்த ஓராண்டாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர்.
அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தபோது, சரத் சுப்பிரமணியன் சங்கர் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, கோவையில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.



