‘மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மாறுவதே இல்லை’ - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
புதுடெல்லி,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-“பிரதமர் மோடி நேற்று டெல்லி எஸ்.ஆர்.சி.சி. பல்கலைக்கழகத
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பிரதமர் மோடி நேற்று டெல்லி எஸ்.ஆர்.சி.சி. பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார். நாட்டின் இளைஞர்கள், கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து உரையாடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அந்த உரை மற்றொரு அரசியல் பிரசாரமாக மாறிவிட்டது.
ஜனநாயகத்தில், கேள்விகளை ஒடுக்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு புதிய அடைமொழியை சூட்டுவதுதான் பிரதமர் மோடியின் பாணி. இதன் மூலம் மோடி அரசின் தோல்விகள் மறைக்கப்படுகின்றன.



