மாவட்டத்தில்பாசன வாய்க்கால்கள் துார்ந்து கிடக்கும் அவலம்:ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் தவிப்பு
விருத்தாசலம்: மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் துார்ந்து முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால், ஏரிப்பாசனம் பெறும் விவசாயிகள் தண்ணீரின்றி தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வீராணம், பெருமாள், வாலாஜா, வெலிங்டன் என பழமையான ஏரிகள் மூலம் நெல், வாழை, எள், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், டெல்டா பாசனம் இல்லாத மங்களூர், நல்லுார், விருத்தாசலம், கம்மாபுரம், பண்ருட்டி, கடலுார் ஆகிய ஆறு வட்டாரங்களில் நெல், எள், மக்காச்சோளம், உளுந்து, வாழை, பூக்கள் சாகுபடியே பிரதானமாக செய்யப்படுகிறது.


