செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் சரிவு
குன்றத்துார்: சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி ஆழமும் உடையது.
பூண்டி ஏரி நீர் வருகையால், கோடை காலத்திலும் இந்த ஏரி 20 அடி ஆழத்திற்கு மேல், நீர் நிரம்பி காணப்பட்டது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ குடிநீர் தேவை மற்றும் பிற தேவைக்கு தினம் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.


