இதே நாளில் அன்று
செப்டம்பர் 8: பாரம்பரிய நாடக கலைஞர் மற்றும் பாடகரான தீனநாத் மங்கேஷ்கர் - ஷெவந்தி தம்பதியின் மகளாக, மஹாராஷ்டிரா மாநிலம், சாங்கிலியில், 1933ல் இதே நாளில் பிறந்தவர், ஆஷா போஸ்லே.
தன் 9 வயதில் தந்தையை இழந்ததால், இவரது குடும்பம் மும்பையில் குடியேறியது. இவர், 1943ல் வெளியான மஜா பால் எனும் மராத்தி திரைப்படத்தில், 'சலா சலா நவ் பாலா' என்ற பாடலை பாடினார்.
தொடர்ந்து திரையிசை, கஜல், பாப், பஜன், நாட்டுப்புற இசை வடிவங்களில் பாடி, ரசிகர்களை கவர்ந்தார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில், 12,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார்.


