சாலை புதுப்பிப்பு துவக்கம்
அவிநாசியில் இருந்து பூண்டி, அனுப்பர்பாளையம், தண்ணீர்பந்தல், புஷ்பா தியேட்டர், மத்திய பஸ் ஸ்டாண்ட், உஷா தியேட்டர், கோவில் வழி, பொல்லிகாளிபாளையம் வழியாக அவிநாசிபாளையம் வரை, 31.8 கி.மீ., துார சாலையை புதுப்பிக்கும் பணி கடந்த பிப்., மாதம் துவங்கியது. தார் விலை உயர்வு, மாநகராட்சி பகுதிகளில் குழாய் பதிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சாலைப் பணி இடையில் நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன. பகல் நேர போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், இரவு நேரங்களில் தார் போட்டு சாலையை புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் – அவிநாசி ரோடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது.


