கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா கோரிக்கை
தர்மபுரி; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதா-னத்தில் நடந்து வரும், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், நேற்றைய போட்டி-களை, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா தொடங்கி வைத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளி,
கல்லுாரிகளில் தினமும் மாணவ, மாணவியரை விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
அனைத்து நாளிலும், மாணவ, மாணவியர் குறிப்-பிட்ட நேரத்தை விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். இது மனதை ஒருமுகப்படுத்தி ஒழுக்-கத்தை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்களுக்கு நிகராக, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். கால்நடைகளுக்கான தீவ-னத்திற்கு அரசு தீர்வு ஏற்படுத்த வேண்டும். தமி-ழகம் முழுவதுமுள்ள விவசாயிகள், 16,000 கோடி ரூபாய் பயிர் கடன்கள் பெற்றுள்ளனர். தமிழக அரசு இதில், 6,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் பயிர் கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் வறட்சியால் கடுமையாக பாதித்துள்ளனர். அதற்-கான இழப்பீடு வழங்க தாமதமாகும் நிலையில், விரைந்து நிவாரணம் வழங்க, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தர்மபுரி மாவட்-டத்தில் செயல்படும், 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. இந்த ஆலைகளை தொடர்ந்து செயல் படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

