ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு - கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!
பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கழுத்து நெரித்து கொலை செய்த கொடூர வழக்கில் இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. | case of impregnating and killing a schoolgirl -arcot youth sentenced to 10 years of rigorous imprisonment
ஆற்காடு அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கர்ப்பமாக்கி, கழுத்து நெரித்து கொலை செய்த கொடூர வழக்கில் இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவன் புருஷோத்தமன் என்கிற ரஞ்சித் ( 30). இவன் கடந்த 2018-ம் ஆண்டு, ஒழலை கிராமத்தில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்திருக்கிறான்.
தந்தையைப் பிரிந்து தாயைப் பறிகொடுத்த மாணவி, உறவினரின் அரவணைப்பில் வாழ்ந்துவந்திருக்கிறார். மாணவியின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்து, அவரிடம் அடிக்கடி தகாத முறையில் நடந்துகொண்டதோடு பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டிருக்கிறான் புருஷோத்தமன்.


