விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட சுவாமி சிலைகள் பறிமுதல்
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் விதிகளை மீறி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சுவாமி சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகையையொட்டி ரோட்டோரங்களில் சுவாமி சிலைகள் விற்பனை தொடங்கியுள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயன சாயங்கள் பூசிய சிலைகளை விற்பனை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு நடை முறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி, கோட்டார் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான சுவாமி சிலைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன.


