‘வெரிபிகேஷன்’ சான்று!
வெளி மாநில தொழிலாளர்களுக்கு கட்டாயம்... பணி புரியும் இடத்தில் போலீசார் விழிப்புணர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை பகுதியில் வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்களுக்கு, ‘போலீஸ் வெரிபிகேஷன் சர்டிபிகேட்’ கட்டாயம் என, போலீசார் தெரிவித்தனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பெரிய நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழில், தேங்காய் உலர்களங்கள், கோழிப்பண்ணை, நார் தொழிற்சாலைகள் என, 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இங்கு அதிகப்படியாக பீஹார், ஒடிசா, உத்தரபிரதேசம், அசாம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தனியாகவும், குடும்பத்துடனும் தங்கி ஒப்பந்த முறையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுகின்றனர்.

