கூடுவாஞ்சேரி அருகே கோர விபத்து: கல்லூரி மாணவிகள் 2 பேர் பலி..!
செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (19). கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அலிஷா நிலோ
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (19). கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அலிஷா நிலோபர் (19). தோழிகளான இருவரும் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒரே மொபட்டில் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் மொபட் மீது பயங்கரமாக மோதியது.
கார் மோதியதில் மொபட்டில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ராஜாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

