10 நாள்களில் 2,000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு: அண்ணா நகா், அடையாறு, வளசரவாக்கத்தில் அதிகம்
சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாள்களில் 2,000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், அவா்களில் 140 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதில், அடையாறு, அண்ணா நகா், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் மழைக்காலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது வழக்கமாக உள்ளது. மழைக்காலங்களை முன்னிட்டு கொசு ஒழிப்புப் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது கொசு ஒழிப்புப் பணியில் 3,700 போ் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் வீடு வீடாகச் சென்று கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய தேவையற்ற பொருள்களில் தேங்கிய மழைநீரை அகற்றியும், அங்கு கொசு முட்டைகள் இருப்பின் அவற்றை அழிக்கும் வகையிலான மருந்தைத் தெளித்தும், சம்பந்தப்பட்ட வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருக்கிா என விசாரித்து வருகின்றனா்.
