திருமலை, திருப்பதியில் விமரிசையாக கொண்டாடப்பட்ட கோகுலாஷ்டமி விழா
திருப்பதி, திருமலை, திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.கோகுலாஷ்டமி விழாகோகுலாஷ்டமியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும்
திருமலை, திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண சாலையில் நேற்று சிறப்பு கோ பூஜை நடந்தது. கோசாலையில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபாலசாமி கோவிலில் தேவஸ்தான அதிகாரி முத்தாடா, ரவிச்சந்திரா சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கோமாதாக்கள் மற்றும் கன்றுகளுக்கு புதிய வஸ்திரம் அணிவித்து, மலர் மாலைகள் சூட்டி, அவற்றை வலம் வந்து பூஜை செய்தார். தொடர்ந்து பசுக்களுக்கு கற்பூர, நெய் தீப ஆரத்தி காண்பித்தார்.
திருமலையில் நேற்று கோகுலாஷ்டமி விழா நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக கோகர்ப்பம் அணை பூங்காவில் உள்ள காளிங்க நர்த்தன ஸ்ரீகிருஷ்ணர் சிலைக்கு நேற்று காலை பஞ்சாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அங்கு உறியடி உற்சவம் நடந்தது. அதில் பங் கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதில் தேவஸ்தான தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


