கண்காணிப்பு கேமரா பதிவுகளை மேம்படுத்த நிதி ஒதுக்காதது ஏன்?: உயா்நீதிமன்றம் கேள்வி
சென்னை, செப். 10: ஊழல் தடுப்புத் துறை அலுவலகங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் வகையில், அவற்றின் திறனை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்காதது ஏன்
சென்னை, செப். 10: ஊழல் தடுப்புத் துறை அலுவலகங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் வகையில், அவற்றின் திறனை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்காதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மனிதவள மேலாம்மைத் துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரேஷன் அரிசி கடத்தலை அனுமதிப்பதற்கு லஞ்சம் கேட்டதாக, சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் ராமராஜன், உதவி ஆய்வாளா்கள் சரவணகுமாா், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சேலம் மாவட்டம் வடக்கு மல்லியக்கரையைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் ஊழல் தடுப்புத் துறையில் புகாா் அளித்தாா்.


