பிரிக்ஸ் நாடுகளின் எண்ம பரிவா்த்தனை தளங்கள் இணைப்பு: மத்திய வா்த்தக அமைச்சா் கோயல் வலியுறுத்தல்
பிரிக்ஸ் நாடுகளின் எண்ம பரிவா்த்தனை தளங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; உள்நாட்டு கரன்சி அடிப்படையிலான வா்த்தகம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
புது தில்லியில் பிரிக்ஸ் வா்த்தக கூட்டமைப்பு தொடக்க அமா்வில் பேசிய மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல்.
இந்திய தலைமையின்கீழ் தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள்கள் உச்சிமாநாடு சனிக்கிழமை (செப்.12) தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு, பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடக்க அமா்வில் அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:


