சிலியில் சோகம்: முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 16 பேர் பலி
சாண்டியாகோ,சிலி நாட்டில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அரோகெனியா மாகாணம் பி
சிலி நாட்டில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இந்த முதியோர் இல்லத்தில் 26 முதியோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், இந்த முதியோர் இல்லத்தில் நேற்று முன் தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென முதியோர் இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளுக்கும் பரவியது. தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த முதியோர் அனைவரும் அலறியடித்து வெளியேற முற்பட்டனர்.

