தனித் துறையாக இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கம்: செயலராக வி.ராஜாராமன் ஐஏஎஸ் நியமனம்
இந்து சமய அறநிலையத் துறை, புதிதாக தனித் துறையாக உருவாக்கப்பட்டு, அதன் செயலராக வி.ராஜாராமன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசாணை:
இந்து சமய அறநிலையத் துறை தனித் துறையாக உருவாக்கப்பட்டு, வி.ராஜாராமன் ஐஏஎஸ் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலராகப் பதவி வகிக்கும் வி.ராஜாராமன் ஐஏஎஸ், முழு நேர கூடுதல் பொறுப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயலராக பொறுப்பு வகிப்பாா். இந்து சமய மற்றும் அறநிலையத் துறை ஆணையரகமும் இந்தத் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

