கணவருடன் கருத்து வேறுபாடு: இன்ஸ்டாகிராமில் ஆறுதல் கூறி..150 பவுன் நகை, ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர்..!
சென்னை,திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி, 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். குடும
திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி, 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
திருவொற்றியூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (29). இவருக்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இளம்பெண்ணின் தந்தை பாரிமுனையில் நகைக்கடை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினைகள் குறித்து ஹரிகிருஷ்ணனிடம் இளம்பெண் கூறிய நிலையில், அவர் ஆறுதல் கூறி, பெண்ணிடம் சிறுகச் சிறுக 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை ஹரிகிருஷ்ணன் பெற்றதாக கூறப்படுகிறது.


