அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் - அன்புமணி
சென்னை,அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள்இதுதொடர்பாக
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சி என்ற வகையில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விடுத்து, அரசு ஊழியர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டை விதிப்பது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க உதவாது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

