பாட்டுப்பாடிய தாய்லாந்து பிரதமர்; கிடார் வாசித்த சிங்கப்பூர் பிரதமர்
அவர் பாட, இவர் வாசிக்க...!அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்.
அவர் பாட, இவர் வாசிக்க...!
அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங். விருந்து நிகழ்ச்சியில் மேடை ஏறிய லாரன்ஸ் வாங், அங்கிருந்த கிடார் இசைக்கருவியை வாசிக்க ஆரம்பித்தார். பதிலுக்கு தாய்லாந்து பிரதமர் அனுதின், மைக் பிடித்து பாட ஆரம்பித்தார். 'பீட்டில்ஸ்' குழுவினரின் 'லெட் இட் பீ' பாடலையும், பாப் டைலனின் 'புளோயிங் இன் த வின்ட்' பாடலையும் தாய்லாந்து பிரதமர் பாட, கிடார் வாசித்தார் வாங். வீடியோ, இணையத்தில் 'டிரெண்ட்' ஆனதும், இரு பாடல்களும் பொருத்தமானவை என்று பாராட்டுகின்றனர் நெட்டிசன்கள்.
'உலகுக்கு இது போன்ற நிகழ்வுகள் தேவை' என்று ஒருவரும், 'மியூசிக்கல் டிப்ளமசி' என்று இன்னொருவரும், 'இதுதான் உண்மையான தலைமைத்துவம்' என்று அடுத்தவரும் கமென்ட் செய்துள்ளனர்.


