வைப்பூர் ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவி நீக்கம்: காஞ்சி கலெக்டர் உத்தரவு
சென்னை, செப். 10– வைப்பூர் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர்
வைப்பூர் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா, வைப்பூர் ஊராட்சி தலைவர் சுமதி, துணைத் தலைவர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து, ஊராட்சி நிர்வாகத்தில், சட்ட விதிகளை மீறி, ஊராட்சி நிதியிலிருந்து, செலவினங்கள் மேற்கொண்டது கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்து, கடந்த ஜூலை 27ம் தேதி, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.




