ஏறிய ஏணியை எட்டி உதைக்கலாமா?
வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுது கிறார்: அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கைகள் நிறுவ, 5.75 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
வரவேற்கப்பட வேண்டிய விஷயம்!
அதேநேரம், ஊண், உறக்கத்தை மறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட நம் முன்னோரை நினைவில் கொள்ள வேண்டியதும் தமிழக அரசின் கடமை!


