இலங்கை நல்லூர் கந்தசாமி தேர் திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்.!
தேர் திருவிழாவை காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். காவடிகள் எடுத்தும் அங்கப்பிரதட்சணம் செய்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 17 ஆம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 6.15 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பம் ஆனது. தேரில் ஆறுமுக சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


