329 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா்கள் இருவா் கைது
காரில் கடத்தி வரப்பட்ட 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் பறிமுதல் செய்து, வெளி மாநில இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் பறிமுதல் செய்து, வெளி மாநில இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை திருக்கோவிலூா்- மடப்பட்டு நெடுஞ்சாலையில் ஆனைவாரி மேம்பாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.




