தாலி கட்டும் நேரத்தில்.. மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல்
மீஞ்சூர்,தாலி கட்டும் நேரத்தில் போலீசுக்கு போன் செய்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருமண வரவேற்புதிருவள்ளூர்
தாலி கட்டும் நேரத்தில் போலீசுக்கு போன் செய்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந் தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதி காலையில் முகூர்த்த ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் தூங்கிக்கொண்டிருந்த மணப் பெண்ணை தட்டி எழுப்பி திருமணத்துக்கு தயாராக இருக்க சொன்னார்கள். ஆனால் மணப்பெண் அடம் பிடித்து மேக்கப் போட வேண்டாம், எனவும் மணவறைக்கு வரமாட்டேன். தாலி கட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.

