வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை
விழுப்புரம், செப். 14: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வியாபாரி விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், பாதிராபுலியூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் த.முருகேசன்(48). இவா், தனது சரக்கு வாகனத்தில் ஊா், ஊராகச் சென்று காய்கனிகள் வியாபாரம் செய்து வந்தாா். தொழில் நஷ்டத்தால் முருகேசன் அவதிப்பட்டு வந்தாராம்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இவா் செப்.12-ஆம் தேதி பாதிராபுலியூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்த முருகேசன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
