கோவில்பட்டியில் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கோவில்பட்டியில் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், சிவனனைந்தபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்து இருளாண்டி மனைவி கனகலட்சுமி (34). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
கனகலட்சுமியும், உறவினரான மாரியம்மாளும் சுந்தரலிங்கபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால், இருவரும் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பினராம்.

